தஞ்சாவூர், நவ.15- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கைவிடப்படும் மக்கள் நலன், சூறையாடப்படும் இளைஞர்களின் எதிர் காலம், மறுக்கப்படும் அரசு ஊழியர்க ளின் உரிமைகள், தடுக்கப்படும் மாண வர்களின் தரமான கல்வி இவற்றை மீட்டெடுக்கும் வகையில் அரசு ஊழியர் - மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று இதில் நவ.18 அன்று கோட்டை நோக்கி பேரணி நடைபெறு கிறது. தஞ்சை மாவட்டத்தில் நவ.14 அன்று பட்டுக்கோட்டை மணிக்கூண்டு, வட் டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆகிய இடங்களில் ஊழியர் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக் கம் நடைபெற்றது. இதே போல் ஒரத்த நாடு வட்டாட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும் நடை பெற்றது. தஞ்சை பனகல் கட்டிடம் முன்பும், வணிக வரி அலுவலகம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ளிட்ட இடங்களிலும், பாபநாசம், கும்பகோணம் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. பட்டுக்கோட்டையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கோ தண்டபாணி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர்கள் கு.சண்முகம், கே.ஞானதம்பி ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. ரெங்கசாமி, மாவட்ட துணைத் தலை வர் சிவ.ரவிச்சந்திரன், வட்டச் செயலா ளர் ரெ.ஞானசூரியன், வருவாய் கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் அ.கா.தங்கராசு, மருந்தாளுநர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ரவி, அரசு ஊழி யர் சங்க பேராவூரணி வட்டத் தலைவர் நாவலரசன், ஜெயக்குமார், பாலு, முரு கேஷ், டி.ஜெயக்குமார்,மனோகர், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டத் தலைவர் பி.அறிவழகன் நன்றி கூறினார்.