பொன்னமராவதி, ஆக.11- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ‘‘குடும்ப வன்முறை தடுப்போம்; சமத்துவம் காத்து நிற்போம்’’ என்கிற முழக்கத்துடன் சிபிஎம் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இயக்கத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் எஸ்.நல்ல தம்பி, எஸ்.பாஸ்கர் மாதர் சங்க ஒன்றி யச் செயலாளர் ஆர்.மதியரசி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் அழகப்பன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் செல்வம் என்கிற ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேருந்து நிலையம், அண்ணாசாலை மற்றும் பொன்ன மராவதியின் முக்கிய கடைவீதிகளில் பணிபுரியும் பெண் கள், பொதுமக்கள்,பள்ளி, கல்லூரி மாணவியர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.