tamilnadu

img

கெரகோட அள்ளியில் பொங்கல் சிறப்பு பரிசு

தருமபுரி, ஜன. 10- தருமபுரி மாவட்டம் அருகே உள்ள கெரகோட அள்ளியில் 668 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கெரகோட அள்ளியில் நடைபெற்ற விழாவில் 668  குடும்ப அட்டைதா ரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பாக ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்  தலா ரூ.1,000 மற்றும் வேட்டி, சேலைகளை  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்  வழங்கினார்.  இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார்.தருமபுரி மாவட்டத்தில் கூட்டுற வுத்துறையின் கீழ் 449 முழுநேர நியாயவிலைக் கடை களும், 561 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும், 9 மகளிர் நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 41 நியாயவிலைக் கடைகளும் ஆக  மொத்தம் 1060 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வரு கிறது.  இம்மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக் கோடு, காரிமங்கலம், பென்னாகரம், அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி ஆகிய வட்டங்களில் 6,22,959 வேட்டி, சேலைகள் ரூ.8 கோடியே 21 லட்சம்  மதிப்பில், வழங்கப்படுவதாக கே.பி.அன்பழகன் தெரிவித்தார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் எச.ரஹ மத்துல்லா கான், வருவாய் கோட்டாட்சியர் (பொ) தேன்மொழி, துணைப்பதிவாளார் ப.வரதராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் காவேரி, ஒன்றியக்குழு உறுப்பி னர் காவேரியம்மாள் மாணிக்கம், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சம்பத், பெரியண்ணன், வட்டாட்சியர் கலைச் செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சம்பத்  ஆகியோர் கலந்து கொண்டனர்.