tamilnadu

img

பெண்களை தற்கொலைக்கு தூண்டும் நுண்கடன் நிறுவனங்கள் வாலிபர் சங்கம் கண்டனம்: ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா?

தரங்கம்பாடி, ஜூலை 14- தனியார் நுண்கடன் நிறுவனங்களில் கடன்பெற்ற  பெண்களை தவணைத் தொகையை கட்ட சொல்லி  மிரட்டுவதாக கடனை கட்ட முடியாமல் தவிக்கும் 100- க்கும் மேற்பட்ட பெண்கள் தரங்கம்பாடி வட்டாட்சியர்  அலுவலகத்தில் புகார் மனுக்களை அளித்தனர். தரங்கம்பாடி வட்டம் ஆக்கூரை சேர்ந்த  இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கா னோர் மண்டல துணை வட்டாட்சியரிடம் புகார் மனு க்களை அளித்தனர். கடன் தொகையை கட்டசொல்லியும், ஏதாவது ஒரு  வேலைக்கு போக வேண்டியது தானே என கேவலமாக பேசி மிரட்டுவதாகவும் அப்பெண்கள் கூறினர். வாலிபர் சங்க வட்ட செயலாளர் கே.பி மார்க்ஸ், முன்னாள் மாவ ட்டச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்த னர்.      

     கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்புறங்களிலும் பரவிவிட்ட தனியார் நுண்கடன் நிறுவனங்கள், கொ ரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும்  சூழலிலும், கடன் தொகையை வசூல் செய்ய பல்வேறு அடாவடித்தனமான செயல்களில் ஈடுப்பட்டு வரு கிறது. பெண்களிடம் மட்டுமே கடன்களை வழங்கும்  அந்நிறுவனங்கள் வரம்பு மீறிய வட்டியை வசூலிப்ப தோடு,தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே தவணைத்தொகை முடிவ தற்குள்ளாகவே மீண்டும் ஒரு தொகையை பண்டிகைக்  காலங்கள் வருகின்ற நேரத்தில் வழங்கி விடு கின்றன. வேண்டாமென கூறும் உறுப்பினர்களை கட்டாய மாக வாங்கியாக வேண்டும் என நிர்ப்பந்தித்தும் சில  நிறுவனங்கள் கடனைக்கொடுத்து விடுவதால் அன்றா டம் உழைத்து சாப்பிடும் மக்களின் சொற்ப ஊதியமும் இந்நிறுவனங்களுக்கு தவணைத்தொகை கட்டுவதற்கே சரியாக இருப்பதால் பொருளாதா ரத்தில் பின்தங்கியே போகின்றனர்.

கிராம விடியல், மதுரா, எக்விடாஸ், குடும்பம், ரெப்கோ, எல்&டி, சமஸ்தா, வளர் ஆதிதி, கிராமசக்தி, உஜ்ஜீவன், ஹெச்டிஎப்சி என 50-க்கும் மேற்பட்ட  நிறுவனங்கள் கிராமங்களில் தங்களது நிறுவனத்தின்  கிளைகளை அமைப்பது போல பெண்களை மட்டும்  உள்ளடக்கிய குழுக்களை அமைத்து 5 லிருந்து 10  நபர்கள் வரை அக்குழுவில் உறுப்பினர்களாக சேர்த்து,  மொத்தமாக ஒரு தொகையை கடனாக அளித்து வாரம்  ஒரு கிழமையில், ரூ.1500 லிருந்து 2500 வரை தொகையை பொறுத்து தவணை முறையில் வசூ லிக்கின்றனர். குழுவை அமைக்கும் போதே குழுக்களுக்கு தலை வர், செயலர் என பொறுப்புகளை தேர்வு செய்து அவர்க ள்தான் ஒவ்வொரு வாரமும் அனைத்து உறுப்பினர்க ளிடமும் பணத்தை கராராக வாங்க வேண்டும். ஒரு  நபரிடம் பணம் இல்லையென்றால் மற்ற உறுப்பி னர்கள் அந்த நபருக்கான தொகையை பங்கீட்டு அளிக்க வேண்டும்.

அதிகாலையிலேயே குழுவாக ஒரு  இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும். பணத்தை பெற்றுக்கொள்ள வரும் அதிகாரி வந்தவுடன் அனை வரும் எழுந்து வணக்கம் சொல்ல வேண்டும். பிறகு வருகை பதிவேடு வாசிக்கப்படும் போது அனைவரும் கட்டாயமாக ஆஜராகியிருக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களுக்கான பணம் முழு வதும் தந்த பிறகே வருகை பதிவேட்டில் கையெ ழுத்திட்டு கலைந்து செல்ல வேண்டும் என்ற அடா வடியான நடவடிக்கையை ஒவ்வொரு கிராமத்திலும் நாள்தோறும் காண முடிகிறது. கடன் தொகைக்கு பல  மடங்கு வட்டியுடன் திருப்பி அளித்தாலும் அப்பாவி ஏழை மக்களின் நிலையை சாதகமாக பயன்படுத்தி ஒவ்வொரு நிறுவனங்களும் அடிமையைப் போன்றே  நடத்தி வரும் சூழலில் தற்போது 3 மாதங்களை கடந்து  கொரோனா ஊரடங்கால் மக்கள் அன்றாட உணவுக்கே  தவியாய் தவிக்கும் சூழலில் அந்த நிறுவனங்களின் தொல்லை எல்லை மீறி போய்விட்டதாக இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் வட்டச் செயலாளர் கே.பி மார்க்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு அருகேயுள்ள கிளிய னூரை சேர்ந்த விஜயா என்கிற ஏழை பெண் 1500 ரூபாயை கட்டவில்லை என்பதற்காக மதுரா என்கிற  நுண்கடன் நிறுவன அதிகாரி கேவலமாக பேசியதால்  அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்போ தும் அதுபோன்ற நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சம் உள்ளது. தற்போது உள்ள சூழலில்  ஏழை, எளிய மக்கள் கடன் தொகைக்கான தவணைத் தொகை யை கட்டுவதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யெனில் வாலிபர் சங்கம் சார்பில் போராட்டங்களை கிராமங்கள் தோறும் நடத்துவோம் என்றார்.