tamilnadu

img

மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சுடர் ஓட்டம்

தரங்கம்பாடி, ஜன.17- நாகை மாவட்டம் தரங் கம்பாடி வட்டம் திரு விளையாட்டம் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 24 ஆம் ஆண்டு பொங்கல் விளை யாட்டு விழா கிளைத்தலை வர் அறிவரசன் தலைமை யில் சுடர் ஓட்டம் நடை பெற்றது. இந்திய அரசி யலமைப்பை பாதுகாக்க வும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் சிவன் கோவில் பகுதியிலிருந்து துவங்கிய சுடர் ஓட்டத்தை சமூக சேவகரும், வீர பாண்டிய கட்டபொம்மன் மக்கள் பொது நல மன்றத் தின் நிறுவனருமான எம்.மாயா வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் பி.சீனிவாசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தடைந்த சுடர் பயணத்தை வாலிபர் சங்க வட்ட செயலாளர் கே.பி.மார்க்ஸ் முடித்து வைத்து சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். சிறுவர்கள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடனம், பாட்டுப் போட்டி, கோலம், கட்டுரை, ஓவியம் ,பானை உடைத்தல் உள்ளிட்ட பல் வேறு போட்டிகளில் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்வ முடன் கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா வில் மாவட்டச் செயலாளர் சிங்கார வேலன்,வட்டத் தலைவர் வீ.எம்.சரவணன் ஆகியோர் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கினர். சங்க நிர்வாகி கள் சாமித்துரை, கோஷ்மீன், பவுல் சத்தியராஜ், ஜெப ராஜ் உள்ளிட்டோர் உரை யாற்றினர். நிறைவாக கிளை செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார். 

டி.மணல்மேடு

இதே போல் தரங்கம் பாடி அடுத்த டி.மணல்மேட் டில் வாலிபர் சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமையை வலி யுறுத்தி 22 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா வியாழனன்று கிளைத்தலைவர் மாய கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சிங்காரவேலன், முன்னாள் மாநில துணைத் தலைவர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்டத் துணைத் தலை வர் குணசுந்தரி, வட்டச் செய லாளர் கே.பி.மார்க்ஸ், ஒன்றிய கவுன்சிலர் லெனின் தாஸ், சிபிஎம் கிளைச் செய லாளர் செல்வம், ஊராட்சி உறுப்பினர் விஜயன், முன்னாள் வட்டத் தலைவர் ஜி.பி சிவா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அமுல்காஸ்ட்ரோ, மாவட்டத் துணைச் செயலாளர் ஐயப்பன் மற்றும் நாட்டாண் மை பால்ராஜ், பஞ்சாயத்தார் சிலம்பரசன் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். சங்கத்தின் கிளை துணைத் தலைவர் முத்தமிழ், துணைச் செயலாளர் ராஜ் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் உரையாற்றினர். நிறைவாக கிளைப் பொருளாளர் சக்தி நன்றி கூறினார்.