tamilnadu

img

பிளாஸ்டிக் தயாரிக்கும் ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு

சேலம், அக்.10- சேலம், பனமரத்துப் பட்டி அருகே அனுமதி யின்றி  பிளாஸ்டிக் பைகள்  உற்பத்தி செய்த ஆலையை  வியாழனன்று மாசுக்கட்டுப் பாட்டு அதிகாரிகள் கண்டு பிடித்து மின் இணைப்பை துண்டித்ததுடன் 500 கிலோ  பிளாஸ்டிக் பைகளை பறி முதல் செய்தனர். ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகம்  முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதன்படி வணிக வளாகங்கள், கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் உணவ கங்கள் போன்றவற்றில் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி ஒரு  முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்  பைகள் மற்றும் பொருட்களை அதிரடி யாக பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள நிலவரப்படி பகுதியில் அனுமதி யின்றி பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும்  ஆலை இயங்குவதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்  சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற  வியாழனன்று சோதனை மேற் கொண்டனர். அப்போது வட மாநிலத்தை சேர்ந்த நேவிசன் என் பவர் ஒரு முறை பயன்படுத்தப்படும்  பிளாஸ்டிக் பைகள் பெரிய அளவி லான கேரிபேக் மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிப்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஆலையில் இருந்த  500 கிலோ ஒரு முறை பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல்  செய்ததோடு கேரி பேக் தயாரிக்க பயன் படுத்தப்பட்ட பெரிய அளவிலான ரோல்களையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து  சம்பந்தப்பட்டவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு  மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். மேலும் ஆலைக்கு வழங்கப்பட்டு மின் இணைப்பையும் அதிரடியாக துண்டிக்க நடவடிக்கை எடுத்தனர். சேலத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்த பிளாஸ்டிக் பைகள்  தயாரிக்கும் ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.