tamilnadu

கொள்ளிடம் ரேசன் கடைகளில் 3 மாதமாக பச்சரிசி வழங்கவில்லை: பொதுமக்கள் புகார்

சீர்காழி, ஜூன் 26- நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளி டம் வட்டாரத்தில் உள்ள 42 ஊராட்சி களில் 55 ரேசன் கடைகளும் சீர்காழி வட்டாரத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் 65 ரேசன் கடைகளும் உள்ளன. அனைத்து கடைகளிலும் கடந்த 3 மாத காலமாக குடும்ப அட்டைதா ரர்களுக்கு பச்சரிசி வழங்கவில்லை. இதனால் பச்சரிசியை பயன்படுத்து பவர்கள், அதிக விலை கொடுத்து தனி யார் கடைகளில் பச்சரிசியை வாங்கி பயன்படுத்துகின்றனர். கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதியில் உள்ள ரேசன் கடைகளுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு எருக்கூர் நவீன அரிசி அலையிலிருந்து புழுங்கல் மற்றும் பச்சரிசி அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 3 மாத காலமாக எருக்கூர் அரிசி ஆலையிலிருந்து புழுங்கல் அரிசி மட்டுமே நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பச்சரிசி நிறுத்தப்பட்டதற்கான காரணம் தெரிய வில்லை. இதனால், பச்சரிசி பயன்படுத் தும் குடும்ப அட்டைதாரர்கள் புழுங்கல் அரிசியை வாங்க மறுக்கின்றனர். எனவே, பச்சரிசியை பயன்படுத்தும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய பச்சரிசியை வழங்க அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு திட்ட மாவட்டத் தலைவர் செந்தில்குமார் மாவட்ட ஆட்சி யருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.