புதுச்சேரி, பிப்.10- புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க உள்ளாட்சித் துறை சார்பில் சமீ பத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏற்க னவே சட்டப்பேரவை முடிவின்படி ஆணை யர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் சட்டப்பேரவை முடிவு மீறப்பட்டுள்ளது என காங்கிரஸ் எம்எலஏ ஜெயமூர்த்தி குற்றம் சாட்டினார். மேலும், பேரவைத் தலைவரிடம் புகார் மனு அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் தலை மைச் செயலர் அஸ்வனிகுமார், உள்ளாட்சித் துறை செயலர் அசோக்குமார், இயக்குனர் மலர்கண்ணன், சார்பு செயலர் கிட்டி பல ராம் ஆகியோர் மீது சட்டமன்ற உரிமைக் குழுவினர் விளக்கம் கேட்டு நேரில் ஆஜராகு மாறு அழைப்பு விடுத்திருந்தனர். உரிமைக்குழுத் தலைவரும் துணைப் பேரவைத் தலைவருமான பாலன் தலை மையிலான உரிமைக் குழு இதுகுறித்து விசா ரணை நடத்தி வருகிறது. கிட்டி பலராம் ஜன வரி 14ஆம் தேதியும், மலர்க்கண்ணன் ஜனவரி 21ஆம் தேதியும் இக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஜனவரி 23ஆம் தேதி உள்ளாட்சித்துறை செயலர் அசோக்குமாரும், அதனைத் தொடர்ந்து 27ஆம் தேதி தலைமைச் செய லர் அஸ்வனிகுமாரும் விளக்கம் அளித்த னர். உரிமைக்குழு கேட்ட கேள்விகளுக்கு தலைமைச் செயலரால் பதில் அளிக்க முடிய வில்லை. இதனால் பதில் அளிக்க மேலும் 5 நாட்கள் அவகாசம் கேட்டார். உரிமைக் குழு வும் அதை ஏற்றுக் கொண்டது. ஆனால் ஒப்பு கொண்டபடி தலைமைச் செயலாளர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து திங்களன்று (பிப். 10) மீண்டும் நேரில் ஆஜராகும்படி உரிமைக் குழு தலைமைச் செயலருக்கு சம்மன் அனுப்பி யது. ஆனால் அவர் நேரில் ஆஜராக வில்லை. தலைமைச் செயலர் எழுத்துப்பூர்வமாக விளக்கக் கடிதம் கொடுத்துவிட்டதா கவும், அதனடிப்படையில் அறிக்கையை தயார் செய்து பேரவைத் தலைவருக்கு அளிக்க உள்ளதாகவும் உரிமைக்குழு தெரிவித்துள் ளது. இதன் மூலம் உரிமைக்குழுவில் ஆஜ ராகி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தலைமைச் செயலர் தவிர்த்துள் ளது குறிப்பிடத்தக்கது.