புதுச்சேரி, ஜன. 4- புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்ய வேண்டும், 56ஜெ விதியின் படி ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்பக் கூடாது, 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றக் கூடாது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தியும், மத்திய அர சின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் ஜனவரி 8ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. வேலைநிறுத்த போராட் டத்தில் புதுச்சேரி நகராட்சி கொம்யூன் பஞ்சாய்த்து ஊழி யர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ் சாய்த்து ஊழியர்கள் சம்மேளனத்தின் செயற் குழு கூட்டம் அமைப்புச் செய லாளர் இரா.பாலசுப்பிர மணியன் தலைமையில் நடைபெற்றது. மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் முன்வைத் துள்ள 10அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும், 7ஆவது ஊதி யக்குழு பரிந்துரையின்படி உள்ளாட்சி ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட எச்ஆர்ஏ, டிஏ, ஆகியவற்றை 1.1.2016 முதல் புதுச்சேரி அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளனம் பங்கேற்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.