புதுச்சேரியில் ஜனவரி 31 ஆம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஜனவரி 31 ஆம் தேதிவரை பள்ளி, கல்லூரிகளுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ஏற்கனவே 1 முதல் 9 வகுப்பு வரை விடுமுறை விடப்பட்ட நிலையில் 10,11,12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தினசரி கொரோனா தொற்று 2000த்தை தாண்டிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.