பெரம்பலூர், மே 4-தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டம், பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஏ.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் என்.செல்லதுரை கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினார். நிர்வாகிகள் சின்னசாமி, விநாயகம், சுபா.தங்கராசு, வரதராஜூ, கருப்புடையார், இளையபெருமாள், கோவிந்தராஜூ, சாமிதுரை, பச்சையா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடும் வறட்சி மாவட்டமாக பெரம்பலூர் உள்ளது. பல கிராமங்களில் பெண்கள் குடிநீர் கிடைக்காமல் காலிக் குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசு, பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து போர்க்கால அடிப்படையில் வறட்சி நிவாரணப் பணிகளை துவக்கிட வேண்டும்.விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி ஜூன் மாதத்தில் மாநிலத் தலைவர்கள் தலைமையில் பேரணி, மாநாடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.