பெரம்பலூர், ஜூலை 31- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த தினத்தை யொட்டி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மருத்துவமனை தின விழா நடைபெற்றது. இதையொட்டி மருத்துவமனை வளாகத்தில் கோலப் போட்டி, தண்ணீர் நிரப்பும் போட்டி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் மருத்து வர்கள், செவிலியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினர். விளையாட்டு போட்டியினை பொதுமக்கள், உள் மற்றும் வெளி நோயாளிகள் கண்டு மகிழ்ந்தனர். பின்னர் நடந்த விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் தர்மலிங்கம், இருக்கை மருத்துவர் ராஜா, செவிலியர் கண்காணிப்பா ளர் மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.