பெரம்பலூர், ஜூலை 29- பெரம்பலூர் புதுவேட்டக்குடி கிராம மக்கள், வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா புதுவேட்டக்குடி கிராம பொதுமக்கள் 50-க்கு மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை அலு வலகத்தை முற்றுகையிட்டு வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் ஆட்சியர் சாந்தாவிடம் கோரிக்கை மனு அளித்த னர். அதில், புதுவேட்டக்குடி கிராமத்தில் 300-க்கு மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வீடு மற்றும் வீட்டு மனை பட்டா இல்லாமல் தவிர்த்து வருகிறோம். இதனால் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு கொடுத்தோம். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அதில் தெரிவித் துள்ளனர்.