பாட்னா:
“குடியுரிமைச் சட்டத்தை தாங்கள் ஆதரித்து இருந்தாலும், குடிமக்கள் பதிவேட்டை ஆதரிக்க மாட்டோம்” என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஏற்கெனவே கூறியிருந்தது.இந்நிலையில், “குடியுரிமை திருத் தச் சட்டம் (CAA) குறித்தே ஒரு சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும்” என்றுஐக்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார்முதல்வருமான நிதிஷ் குமார் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்டிரிய ஜனதாதளம்), சிஏஏ- என்ஆர்சி தொடர்பாக, பீகார் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்து பேசுகையிலேயே நிதிஷ்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.“என்ஆர்சி-யை பீகாரில் நடைமுறைப்படுத்த மாட்டோம். என்.ஆர்.சிக்கு எந்த நியாயமும் இல்லை. அது அசாமை மட்டுமே அடிப்படை அலகாக கொண்டு விவாதிக்கப்பட்டது. அதை நாடு முழுவதும் கொண்டுவருவதை ஏற்க மாட்டோம். ஏற்கனவே பிரதமர்மோடியும் இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.அதேநேரம் ‘சிஏஏ’ பிரச்சனை குறித்து சிறப்பு கலந்துரையாடல் வேண்டும். இது தொடர்பான ஒவ்வொருபிரச்சனையும் விவாதிக்கப்பட வேண்டும். யாருடைய மனதிலும் சில குழப்பங்கள் இருக்கக் கூடும். எனவே, வெவ்வேறு கருத்துக்கள் வரும் புள்ளி குறித்துவிவாதிக்கப்பட வேண்டும்” என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.