tamilnadu

img

பீகாரில் 5 மாதங்களுக்கு பிறகு பொது போக்குவரத்து தொடங்கியது…  

பாட்னா
வடமாநிலங்களில் ஒன்றான பீகாரில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுடன் பொது போக்குவரத்து முடக்கப்பட்டது.  

இந்நிலையில் மத்திய அரசின் தளர்வுகள் விதிமுறைப்படி பீகார் மாநிலத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தளர்வுகளில் முக்கியமாக பொது போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் இன்று முதல் (ஆக., 25) அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்பட்டன. 5 மாத காலத்திற்கு பிறகு பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்தனர்.

ஏற்கெனவே நாட்டின் கொரோனா மையமாக உள்ள மகாராஷ்டிராவில் 50% அளவில் பொதுப்போக்குவரத்து இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

பீகாரின் கொரோனா நிலவரம்... (ஆக  - 25 மதிய நிலவரப்படி) 

மொத்த பாதிப்பு : 1.22 லட்சம் 

உயிரிழப்பு : 511 

குணம்  : 98,325