பாட்னா:
வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய இளைஞர்களில் பலர் மாட்டிறைச்சி சாப்பிடக் கற்றுக்கொண்டு விடுவதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மிகவும் ‘கவலை’ப்பட்டுள்ளார்.“நாம் நம் குழந்தைகளை கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளுக்கு அனுப்புகிறோம். அவர்கள் ஐஐடி-யில் படித்து இஞ்சினீயர்களாகி, வெளிநாடுகளுக்குச் செல்கி றார்கள். அப்போது பெரும்பாலானவர்கள் மாட்டுக்கறி சாப்பிட ஆரம்பித்து விடுகின்றனர்” என்று கூறியுள்ள கிரிராஜ் சிங், “இதற்கு, நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியப் பெருமைகளை அவர்களுக்கு சொல்லித் தராததுதான் காரணம்” என்றும் புலம்பியுள்ளார்.மேலும், “பள்ளிகளில் கீதை ஸ்லோகங்களைக் கண்டிப்பாகக் கற்பித்துத் தர வேண்டும்” என்று கூறியுள்ள கிரிராஜ் சிங், “100 வீடுகளில் உள்ள புத்தகங்களைக் கணக்கெடுத்துப் பார்த்தால் வெறும் மூன்றுவீடுகளில்தான் கீதையோ ராமாயணமோ இருக்கிறது” என்றும் வருத்தப்பட்டுள்ளார்.இறுதியாக, ‘இந்தியனாக இருந்தால் மாட்டுக்கறி சாப்பிடாதீர்கள்’ என்று ‘தேசபக்தி மிரட்டல்’ ஒன்றையும் கிரிராஜ் சிங் விடுத்துள்ளார்.