பாட்னா:
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நேரத்தில், பீகாரில் சட்டப்பேரவைத் தேர் தலை நடத்துவது சரியல்ல! என்று பாஜகவுக்கு, அதன் கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சியிடமிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சார ஏற்பாடுகளில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், லோக்ஜனசக்திக் கட்சியின் தலைவரும் ராம்விலாஸ் பாஸ்வானின் மகனுமான சிராக் பாஸ்வான் டுவிட்டரில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“பீகார் மட்டுமல்ல நாடுமுழுமையுமே கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டுள் ளது. மத்திய அரசின் நிதிநிலையில் மட்டுமன்றி, பீகாரின் நிதிநிலையிலும் கொரோனாபாதிப்பை ஏற்படுத்தியுள் ளது. இந்த நேரத்தில் தேர்தல்நடத்துவது மாநிலத்துக்கு பெரும் நிதிச்சுமையை ஏற் படுத்தும்.பல்வேறு சூழல்களையும் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில் தேர்தல் நடத்தினால், மிகப்பெரிய அளவில் மக்கள் பாதிக்கப்படுவார்கள். கொரோனா-வுக்குபயந்து அவர்கள் வாக்களிக்கவும் வரமாட்டார்கள். இதனால் வாக்குப்பதிவு சதவிகிதமும் குறைந்துவிடும். இதுஜனநாயகத்துக்கு நல்லதல்ல!” என்று சிராக் பஸ்வான்குறிப்பிட்டுள்ளார்.