tamilnadu

img

கொரோனாவால் தொப்பம்பட்டி மாட்டுச்சந்தை ரத்து... ஒரு கோடி வர்த்தகம் பாதிப்பு

பழனி:
தமிழக அளவில் பிரசித்தி பெற்றதொப்பம்பட்டி மாட்டுச்சந்தை கொரோனா வைரஸ் தொற்று நோயால்ரத்து செய்யப்பட்டுவிட்டது.

மாட்டுச்சந்தையைப் பொறுத்தமட்டில் தமிழகத்தில் சித்திரையில் கண்ணபுரத்திலும், ஆனியில் அத்திக் கோம்பையிலும் (ஒட்டன்சத்திரம்), ஆடியில் தொப்பம்பட்டி (பழனி) மற்றும்அந்தியூரிலும் ஆவணியில் கோபிசெட்டிப்பாளையம் போன்ற இடங்களிலும் கால்நடைச் சந்தைகள் கூடுவது வழக்கம்.

பழனியை அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கூட்டப்படும் குதிரை, மாட்டுச்சந்தை திருவிழா ரத்து செய்யப்பட்டுவிட்டது. கடந்த 57 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மாட்டுச்சந்தை திருவிழாகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 58-ஆவது ஆண்டில் முதன் முதலாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தொப்பம்பட்டி ஊராட்சித் தலைவர் ராமராஜ் கூறியதாவது:-பழனி தொப்பம்பட்டி அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் கால்நடைச் சந்தை (மாட்டுத் தாவணி) நடைபெறுவது உண்டு. இந்தச்சந்தை ஏழு நாட்கள் தொடர்ந்து நடைபெறும். காங்கயம், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, உடுமலைப்பேட்டை தாராபுரம், ஒட்டன்சத்திரம், திருச்சிராப் பள்ளி, மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிகளவில் நாட்டுமாடுகள் வருவது வழக்கம். இங்கு இரண்டு லட்சம் ரூபாய் விலையில் காங்கயம் காளைகள் விலை போயுள்ளன.குறிப்பாக பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து குதிரைகளும் விற்பனைக்கு வரும். இதனால் குதிரை வியாபாரத்திற்கும் தொப்பம்பட்டி சந்தை பெயர்பெற்றதாகும்.

இந்த ஒருவாரச் சந்தையில் மாடுகளுக்கு லாடும் கட்டுதல், கொம்பு சீவுதல் தொழிலாளர்களும் வந்திருப்பர். மாடுகளுக்கு தேவைப்படும் சாட்டை, சலங்கை ஆகியவை விற்பனை செய்யப்படும். கிட்டத்தட்ட 30-முதல் 40 கடைகள் வரை இதற்காக அமைக்கப்படும். கொடுவாள், சுத்தியல், விவசாயக்கருவிகளும் இங்கு விற்கப்படும்.மாடுகளுக்கு தண்ணீர் வசதி மட்டுமல்லாது, மாடுகளை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லவாகன வசதியும் செய்துதரப்படு மென்றார்.இப்போது சந்தை நடைபெறாததால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இனி அடுத்த ஆடிப்பெருக்கிற்குத்தான் சந்தை கூடும். ஏனெனில் அங்காளம்மன் கோவில் திருவிழாவும், மாட்டுச்சந்தையும் ஒன்றாகத்தான்நடைபெறும். இந்தாண்டு கோவில்திருவிழா நடைபெறததால் மாட்டுச்சந்தையும் நடைபெறவில்லையென்றார்.