tamilnadu

img

மதச்சார்பின்மையை கேள்விக்குறியாக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பழனி:
அரசியலமைப்புச்சட்டம் வழங்கியுள்ள மதச்சார்பின்மை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை மத்திய அரசு பறிக்கக்கூடாது. தமிழக சிறைகளில் பத்தாண்டுகளுக்கும் மேலுள்ள முஸ்லிம்சிறைவாசிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி பழனியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில்சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.குருசாமி, இ.கே,ஆரிஸ்பாபு, கே.சௌகத்அலி, எச்.காதர்ஷெரீப் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.

தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், போடி, பெரியகுளம், கூடலூர் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜிஎம்நாகராஜன் மாவட்டச் செயலாளர் சிமு. இப்ராஹிம் மாவட்டப் பொருளாளர், பேரா சவுக்கத்அலி,  எஸ் சஞ்சீவிக்குமார், சிபா ஆண்டவர்,  கே ராஜப்பன், மன்னர்மன்னன், எம்.தமீம் சேட், எஸ்.உசேன் வழக்கறிஞர் சாகுல்ஹமீது, எம்.காஜாமைதின், ஷேக் அப்துல்லா, அஸ்கர், பேரா ஜெயபால், வீரர் அப்துல்லா, முத் துக்கிருஷ்ணன் எல். ஆர். சங்கரசுப்பு,  எம்.ராமச்சந்திரன், எஸ்.வெண்மனி,  பி. ஜெயராஜ், எம்.வி. முருகன்,  எஸ்கே பாண்டியன், மஸ்தான், ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்ட நிர்வாகி ரேணுகாதேவி, தமிழ்நாடு அரசுஅனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கமாவட்ட துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் திருமலை, மாவட்டத் துணைத்தலைவர் பிச்சைக்கனி, வீர. சதானந்தம் முகமது அலி ஜின்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.