tamilnadu

img

பொதுத்துறை தனியார்மயமாக்கலை கண்டித்து ஆர்ப்பாட்டடம்

மதுரை:
கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ரூ.7,500 வழங்க வேண்டும்,ரேசன் கடைகளில் அனைத்துப்பொருட்களையும் இலவசமாக வழங்கவேண்டும்.  தேசியஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 100 நாளில் இருந்து 200 நாளாக உயர்த்தவேண்டும்.  அத்தியாவசிப் பொருட்கள், பண்ணை வர்த்தகம், மின்சாரச் சட்டம், சுற்றுசூழல் சட்டம், புதிய கல்விக்கொள்கை ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். பொதுத்துறைகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிடவேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

மதுரை  யா.ஒத்தக்கடையில் விவசாயிகள்சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில்  அகில இந் திய விவசாயத்  தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.மேற்கு ஒன்றியம்  சத்திரபட்டியில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைச்செயலாளர் து.இராமமூர்த்தி, தேனூரில் சிஐடியு மாவட்ட நிர்வாகி எம்.செளந்தர், மேலூரில்சிஐடியு தாலுகா தலைவர் எஸ்.பி.மணவாளன், அலங்காநல்லூரில்  சிஐடியு ஆண்டிச்சாமி, வாடிப்பட்டியில் சிஐடியு மாவட்டத் தலைவர் செ.கண்ணன், கருமாத்தூரில் விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி பி.எஸ்.முத்துப்பாண்டி, உசிலம்பட்டியில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் குமாரசாமி, சேடபட்டியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், தே.கல்லுப்பட்டியில் சிஐடியு மாவட்டத் துணைச்செயலாளர் பி.மணிகிருஷ்ணன், திருமங்கலத்தில் சிஐடியு நிர்வாகி சித்திரவேலு, திருப்பரங்குன்றத்தில் சிஐடியு நிர்வாகி சி.பாண்டியன், கீழக்குயில்குடியில்   சிஐடியுமாவட்டத் துணைத் தலைவர் பொன் கிருஷ்ணன், அவனியாபுரத்தில்  விசைத்தறி சங்க பொதுச் செயலாளர் ஏ.செல்வம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்
திண்டுக்கல் பேகம்பூர் சிஐடியு அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசன், மாவட்டத்தலைவர் பிரபாகரன், மாவட்டப் பொருளாளர் தனசாமி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திண்டுக்கல் வேளாண் பொறியியல் துறைஅலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் அஜாய் கோஷ், பழனிச்சாமி, ராஜேந்திரன், பவுல்ராஜ்,அம்மையப்பன், பெருமாள், சரத்குமார், ஆவுளியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

கோபால்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் என்.பெருமாள், தாண்டிக்குடியில் விவசாயிகள் சங்க நிர்வாகிககள் எம்.செல்லையா, சேதுராமலிங்கம், பாளையத்தில் விவசாயிகள் சங்கம் மாவட்டப் பொருளாளர் தங்கவேல், ராமு,அய்யலூரில்  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டப்பொருளாளர் கண் ணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வேடசந்தூரில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் நாகராஜ், நத்தத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராணி, பழனியில் கே.அருள்செல்வன், பி.செல்வராஜ், கே.பிச்சைமுத்து, எஸ்.பி.மனோகரன், சிலுக்குவார்பட்டியில் சிஐடியு கூட்டுறவு சங்க மாவட்டச் செயலாளர் சாதிக் அலி ஆகியோர்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்
சிவகாசியில் சிஐடியு கன்வீனர் சுரேஷ் குமார், குமாரலிங்கபுரத்தில் சுந்தரம், தாயில் பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் முனியசாமி, சுக்கில நத்தத்தில் சண்முகத்தாய், விருதுநகர் வி.எம்.சிகாலனியில் மாதர் சங்கநிர்வாகி முத்துமாரி. அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருப்பதி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவில்லிபுத்தூர் நகரில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பிச்சைக்கனி, மல்லியில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் சந்தனம், வன்னியம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் மூர்த்தி, வத்திராயிருப்பு ஒன்றியத்தில் மூன்று  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கமாவட்டத் தலைவர் விஜய முருகன், மாவட்டத்துணைத்தலைவர் மணிக்குமார், ஒன்றியத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இராஜபாளையம் கிழக்கு ஒன்றியத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகி பழனிச்சாமி, மேற்கு ஒன்றியத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் துணைத்தலைவர் மாரியப்பன், தையல் தொழிலாளர் சங்கம்மாவட்டச் செயலாளர் சாராள், பால்சாமி,இராஜபாளையம் நகரில் சிஐடியு ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், கலந்துகொண்டார். பி.ராமன், எஸ்.அய்யர், காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.சீப்பாலக்கோட்டையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்தியவிவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர்  ஏவி.அண்ணாமலை, பெரியகுளம் தாலுகாவில்ஜெயமங்கலம் குள்ளப்புரம் ஜி கல்லுப்பட்டி  ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் த.கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். இராமச்சந்திரன், மாதர் சங்க மாவட்டச்செயலாளர் எஸ்.வெண்மணி,  போடி தாலுகாவில் டொம்புச்சேரி சில்லமரத்துப்பட்டி ஆகிய  இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எஸ். செல்வம், உத்தமபாளையம் ஏரியாவில்  பண்ணைப்புரம் தேவாரம் கோம்பை உத்தமபாளையம் ஆகிய நான்கு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் எல் ஆர் சங்கரசுப்பு,சி.வேலவன், வி.மோகன் எஸ்.சுருளிவேல், பி.சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர் .

தேனி தாலுகாவில் தாடிச்சேரி அன்னஞ்சி ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர்  சி.முருகன், வி.என். ராமராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர் கடமலைக்குண்டு ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர்  கே. தயாளன், எஸ்.போஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர்.

சிவகங்கை
சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு   சிஐடியு மாவட்டச்செயலாளர் ஆர்.வீரையா, காளையார்கோவிலில் விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் முத்துராஜா, திருப்புத்தூரில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன், பட்டமங்கலத்தில் பிஎல்மாணிக்கம், மானகிரியில் வேணுகோபால், தேவகோட்டையில் விவசாயத் தொழிலாளர்கள் சங்க பொறுப்பாளர் பொன்னுச்சாமி,விவசாயிகள் சங்க பொறுப்பாளர் சுந்தரம், சிஐடியு  பொறுப்பாளர் கேசவன், மானாமதுரையில் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் விஜயகுமார், திருப்புவனத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், சிஐடியு மாவட்டப் பொறுப்பா
ளர் அய்யம்பாண்டி, முக்குடி ஊராட்சித் தலைவர் முத்தையா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சிவாஜி,இராமேஸ்வரத்தில் சிஐடியு மாவட்டத் துணை செயலாளர் கே.தனுஷ்கோடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், சிஐடியு தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.