பாலுக்கு கட்டுப்படியான விலை கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க தொப்பம்பட்டி ஒன்றியம் சார்பாக பழனி சார் ஆட்சியரிடம் மனுக் கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் கே.சின்னத்துரை தலைமையில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே.அருள்செல்வன், ஒன்றிய நிர்வாகிகள் பொன்ராஜ், அய்யாச்சாமி, சக்திவேல் நல்லப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.