பழனி:
பழனி நகரில் தமிழக முதலமைச்சர் சிறப்பு திட்டத்தின் கீழ் 50 கோடியில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறுகிறது இப்பணிநடைபெறும் விதம் பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து பழனிநகர் செயலாளர் கந்தசாமி திங்களன்று விடுத்துள்ள அறிக்கை:-
பழனி நகர் சாலை விரிவாக்கப்பணி தொடர்பாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை மாதம்15-ஆம் தேதி முற்றுகை போராட் டம் நடத்தியது. இதையடுத்து பழனி கோட்டாட்சியர் பழனி வட்டாட்சியர். பழனி நகராட்சி ஆணையர். காவல்துறை ஆய்வாளர். நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மற்றும்மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களைஅழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் இனிமேல் நடக்கக்கூடிய பணிகள் அனைத்தும் தரமாகவும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் நடைபெறுமென உறுதியளித்தார். இது தொடர்பாக அதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தல் களை வழங்கினார்.
ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரயில்வே சாலையில் கழிவு நீர் வெள்ளம் போல் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கான்கிரீட் கால்வாய் அமைக்கமுயற்சிக்கின்றனர். இதை நகர் மன்ற முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம் வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் அலட்சியம் தொடர்கிறது.ரெட் கிராஸ் சாலையில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வேணுகோபால் தொகுதி மேம் பாட்டு நிதியின் கீழ் மூன்று லட்சம்ரூபாய்க்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது அந்த ஆழ் குழாய்க் கிணறு அடியோடு அழிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு தண்ணீர்போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை. கட்டப்பட்ட சாக்கடைகளில் கழிவுகள் இதுவரை அகற்றவில்லை சிமெண்ட் கழிவுகள் கொட்டி கிடக்கிறது புது தாராபுரம் சாலையில் மையப்பகுதியில் அழகுபடுத்தும் பணி நடைபெறுகிறது இதன் காரணமாக அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. கான்வென்ட் சாலை மிகவும் குறுகிவிட்டது. அந்த பகுதியில் செல்லும் பள்ளி மாணவர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பற்றசூழ்நிலை உள்ளது. பல இடங்களில் உடைக்கப்பட்ட குழாய்கள்இதுவரை சரி செய்யப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பணிகள் முறையாக நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.