tamilnadu

img

கேரளத்தின் நிபா தடுப்பு நடவடிக்கை நாட்டுக்கே முன்மாதிரி: ஒடிசா முதல்வர் பாரட்டு

திருவனந்தபுரம், நவ.3- கேரளத்தின் நிபா தடுப்பு நடவடிக்கை கள் நாட்டுக்கே முன்மாதிரி என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டு தெரி வித்தார்.  புவனேஸ்வரில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் அலுவலகத்தில் நடந்த பாலின பூங்கா (ஜென்டர் பார்க்) தொடர்பான கூட் டத்தில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா பங்கேற்றார். அப்போது பேசிய நவீன் பட்நாயக், கேரளத்தில் செயல்பாட்டில் உள்ள ஜென்டர் பார்க்குடன் ஒத்துழைக்க ஒடிசா அரசு விரும்புகிறது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து கேரள முதல்வருடன் விவாதிக்கப்படும். திறன் மேம்பாட்டில் அனைத்து விதமான உதவிகளும் வழங்குவதாக நவீன் பட்நாயக் உறுதி அளித்தார். 

முன்னதாக ஒடிசா திறன் மேம்பாட்டு ஆணைய தலைவர் சுப்ரதோ பக்சியுடன் ஜென்டர் பார்க் தொடர்பாக அமைச்சர் கே.கே.சைலஜா ஆலோசனை மேற்கொண் டார். கேரளத்தில் இந்த துறையில் நடை பெறும் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் அவரை கே.கே.சைலஜா சந்தித்தார். கேரள சுகாதாரத்துறையின் சாதனைகளை ஒடிசா முதல்வர் பாராட்டினார். சுகாதாரக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ள கேரளத்தின் செயல்பாடு கள் விவாதத்தின் முக்கிய பகுதியாக மாறியது. நிபா தடுப்பு நடவடிக்கையில் கே.கே.சைலஜாவின் செயல்பாடுகளை நவீன் பட்நாயக் பாராட்டினார்.  ஒடிசாவின் நிதி, சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு ஆகிய துறைகளின் செயலாளர்களிடமும் அமைச்சர் விவாதித்தார். ஒடிசா திறன் மேம்பாட்டு ஆணைய தலைவர் சுப்ரதோ பக்சி, ஒடிசா முதல்வரின் ஆலோசகர் ஆர்.பால கிருஷ்ணன், கேரள ஜென்டர் பார்க் சிஇஓ டாக்டர். பி.டிஎம்.சுனீஷ் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட னர்.