tamilnadu

img

ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கை ஏன் தொடரக்கூடாது?

உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை, டிச. 13-  மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யில்  மனுத் தாக்கல் செய்திருந் தார். அதில், “அமைச்சர் பதவி யைப் பயன்படுத்தி 2011-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு  வரை வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்த்தது தொடர் பாக  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு  செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறை யினருக்கு உத்தரவிடவேண்டும்” எனக் கூறியிருந்தார்.   இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் புகாரில் முகாந்திரம் இல்லை எனத் தெரிய வந்ததால் விசாரணை கைவிடப் பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 1996-ஆம் ஆண்டு திருத்தங்கல் ஊராட்சி துணைத் தலைவராக பதவி வகித்தது  முதல் தற்போது வரை அவருடைய வருமானம், சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தனர்.

அப்போது,  லஞ்ச ஒழிப்பு இயக்குநர்,  தமிழக பொதுத்துறை செயலர் ஆகி யோர் சீலிட்ட கவரில் அறிக்கை கள் தாக்கல் செய்தனர்.  அதில், “விசாரணையின் அடிப்படையில்,  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப் பட்டது” எனக் குறிப்பிடப்பட்டி ருந்தது.  இதைத்தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்  அனைத்து ஆவணங்களையும்,  நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய  தமிழக பொதுத்துறை செய லருக்கு உத்தரவிட்டு  வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு வெள்ளியன்று விசார ணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் குறிப்பிட்ட காலத்தில், அவருக்கு சொத்து மதிப்பு குறிப்பிட்ட அளவை விட எட்டு சதவீதம்தான் அதிகமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முதல் கட்ட விசாரணை அடிப்படையில் வழக்கை முடிக்கலாமா? ஏன் விசாரணயை மேற்கொண்டு தொடரக் கூடாது என கேள்வி யெழுப்பிய நீதிபதிகள்  வழக்கை ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  உத்தரவிட்டனர்.