திருப்பூர், ஜூன் 22- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், திருப்பூர் குலாம் காதர் லே அவுட் கிளை சார்பாக 25யூனிட் ரத்தம் அரசு மருத்துவ மனைக்கு தானமாக வழங் கப்பட்டது. ரத்த தானம் செய்த இளைஞர்களைப் பாராட்டி அரசு மருத்துவமனை சார் பாக மருத்துவர் ஜெகதீசன் சான்றிதழ் வழங்கி கவுரவித் தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்க வேல், மாவட்ட செயலாளர் செ.முத்துக் கண்ணன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் செ.மணிகண்டன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச்செயலாளர் வழக் கறிஞர் வை.ஆனந்தன் மற்றும் குலாம் காதர் கிளையின் முன்னாள் செயலாளர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாலிபர் சங்க மாவட்ட ரத்த தான கழக தலைவர் சிவசண்முகம், வடக்கு மாநகர தலை வர் துரை.சம்பத், செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் ப.ஞானசேகர் உள்ளிட் டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.