விருதுநகர், அக்.5- விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே சனிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ளது தேவதானம். இங்கு அரசு விதைப் பண்ணை உள்ளது. இதனருகே சாலையோர பள்ளத்தில் இரண்டு வாலி பர்கள் காயங்களுடன் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அவ்வழியே சென்றவர்கள் சேத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அங்கு ஒரு இருசக்கர வாகனம் கிடந்ததும், அது சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதி யிருப்பதும் தெரியவந்தது. உயிரிழந்த இரண்டு பேரும் இருசக்கர வாகனத்தில் வந்தபோது மரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந் துள்ளது. பலியான இரண்டு பேரும் திருநெல்வேலி மாவட் டம், தேவிபட்டினத்தைச் சேர்ந்த ராஜகுரு (21), ஸ்டா லின் (17) என்பது தெரியவந்தது. இருவரும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் தொழில் செய்யும் கூலித் தொழிலாளர்கள் ஆவர்.