சு.வெங்கடேசன் எம்.பி., கடும் கண்டனம்
மதுரை, ஜூன் 20- கொரோனா நோய் அச்சுறுத்தலால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் உல கத்தமிழர்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவதில் போட்டிப்போட்டு வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசு களின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று உலக கொள்ளை நோயாக அறிவிக்கப்பட்டு உலகம் முழு வதும் லட்சக்கணக்கான மக்கள் பலி யாகிவருகின்றனர். தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் சில நாட்களில் ஒரு கோடியை தொட்டு விடும்.
வளைகுடா நாடுகளில் பரிதவிக்கும் தமிழர்கள்
கொரோனா வைரஸ் தொற்று உல கத்தின் பல்வேறு நாடுகளில் பாதிப்பு களை ஏற்படுத்த தொடங்கியவுடன், அந்த நாடுகளிலிருந்து வெளிநாடு வாழ் இந்தி யர்களை அழைத்து வருவதற்கான “வந்தே பாரத்” திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு நாடுகளிலிருந் தும் இந்தியர்கள் திரும்பி வர ஆர்வம் காட்டினர். அதற்குரிய கட்டணத்தை வசூல் செய்து இந்தியர்களை திரும்ப கொண்டுவந்து சேர்க்கிறது ஏர் இந்தியா விமானங்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய வளைகுடா நாடுகளிலிருந்து திரும்ப வருவதற்காக லட்சக்கணக்கான தமிழ் மக்கள் பதிவு செய்துள்ளனர். வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் எண் ணிக்கை 34 லட்சம். இதில் மலையாளி களின் எண்ணிக்கை 10 லட்சம், அவர் களுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் இருப்பவர்கள் தமிழர்கள். 4.5 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள்.
வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் சிக்கி செய்வதறியாது திகைத்து நிற்கின்ற னர். பல்வேறு கட்டங்களாக செயல்படுத் தப்பட்டு வரும் “வந்தே பாரத்” திட்டத்தில் இதுவரை 1175 முறை விமானங்களை இந் திய அரசு இயக்கியுள்ளது. இவற்றுள் 279 விமானங்கள் கேரளாவிற்கு மட்டும் இயக்கப்பட்டன. இந்த 279 பயணத்தி லும் 238 விமானங்கள் வளைகுடா நாடு களிலிருந்து கேரளாவிற்கு இயக்கப்பட் டுள்ளன. ஜூன் நான்காம் தேதி வரை சுமார் 25 ஆயிரம் மலையாளிகள் கேரளா திரும்பியுள்ளதாக கேரளா முதல்வர் அறிவித்துள்ளார்.அவற்றுள் 20 ஆயி ரம் பேர் வளைகுடாவிலிருந்து மட்டும் திரும்பியுள்ளனர்.
73 விமானங்கள் மட்டுமே இயக்கம்
அடுத்த கட்டத்தில் இதுவரை 53 முறை வளைகுடா நாட்டிலிருந்து மலையாளிகளை திரும்பக்கொண்டு வந்துள்ளது ஏர் இந்தியா, இதன் மூலம் மேலும் 10 ஆயிரம் பேர் திரும்பியுள்ள னர். அதே நேரத்தில் தமிழகத்திற்கு இது வரை 73 விமானங்கள் மட்டுமே வந்துள் ளன, அதில் 27 விமானங்கள் மட்டுமே வளைகுடா நாடுகளிலிருந்து மக்களை திரும்ப அழைத்து வந்துள்ளன. மேல்குறிப்பிட்ட விமான சேவையின் மூலமாக இதுவரை மொத்தமாக 12,000-14,000 தமிழர்கள் மட்டுமே திரும்ப வந்துள்ளனர். அவற்றுள் வளைகுடா நாடுகளிலிருந்து திரும்பிவந்த தமி ழர்களின் எண்ணிக்கை வெறும் 5 ஆயிரம் மட்டுமே. அதாவது ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே.
ஏன் இந்த பாரபட்சம்?
கேரளா மக்களை அதிக எண்ணிக் கையில் திரும்ப அழைத்து வர கேரள அரசு தொடர்ந்து மத்திய அரசை வற் புறுத்துகிறது. வந்தேபாரத் திட்டத்தில் அதிக விமானங்களை கோரி பெறு கிறது. ஆனால் தமிழக அரசோ இதற்கு நேர் எதிராக செயல்படுகிறது. உல கெங்கும் பதிவு செய்து காத்திருக்கும் தமிழர்களை அழைத்துவர எந்த முன் முயற்சியும் தமிழக அரசிடம் இல்லை. அதனால் மிகக்குறைவான விமானங் களே தமிழகத்துக்கு இயக்கப்படுகிறது. கேரளாவுக்கு இயக்கப்பட்டுள்ள விமா னங்களில் நான்கில் ஒரு பங்கு விமா னங்களே தமிழகத்துக்கு இயக்கப்பட் டுள்ளது. இதே நிலை நீடித்தால், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து தமிழகம் வரவேண்டியவர்கள் வந்து சேர இரண்டு மாதங்களுக்கு மேலாகும். வெளிநாடு வாழ் மலையாளிகளுக் கென தனியாக ஒரு துறை கேரளாவில் செயல்பட்டுவருகிறது. கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்தவுடன், தாயகம் திரும்பி வரவிரும்புவோரை இணையதளத்தில் பதிவு செய்யச்சொன் னது கேரள அரசாங்கம். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதற்குரிய முன் னுரிமையுடன் கூடுதல் விமானங்களை இயக்கி தம் மக்களை திரும்ப அழைத்துக் கொண்டது.
தமிழக அரசு,சில கட்டங்களில் தனிமைப்படுத்துவதற்கான கட்டமைப்புகள் இல்லையென காரணத்தை கூறி விமா னத்தை இயக்கவேண்டாம் என்று தெரிவித்தது. வந்தே பாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் முதல் பகுதியில் ஒரு விமா னம் கூட தமிழகத்துக்கு இயக்கப்படவில்லை.
‘பகல் கொள்ளை’ கட்டண வசூல்
வந்தேபாரத் விமானங்கள் இல்லாத போதும் தமிழ் மக்கள், தங்கள் பகுதியில் இயங்கும் தமிழ்ச்சங்கங்கள் மூலமும், சில நிறுவனங்களின் மூலமும் அவர்களாகவே ஒன்றிணைந்து தனி விமானத்தை பிடித்து தமிழகம் வந்தால் அவர்களிடம் தமிழக அரசு நடந்து கொள்ளும்விதம் “பகல் கொள்ளை” போல் உள்ளது. நோய் தொற்றிலிருந்து தப்பித்து சொந்த மண்ணிற்கு வந்தால் போதும் என்று தங்களின் சேமிப்புகள் அனைத்தையும் இழந்து, கடன் வாங்கி விமானத்தில் தமிழகம் வந்தால், சோத னைக்கும், தனிமை படுத்துதலுக்கும் தமிழக அரசு வசூ லிக்கும் கட்டணம் நபர் ஒன்றுக்கு இருபத்தி ஐயாயிரம் அள வுக்கு இருக்கிறது. இதே நேரத்தில் கேரள அரசு, அவர்கள் வந்தே பாரத் மூலமாக வந்தாலும், அவர்களாகவே விமா னத்தை பதிவு செய்துவந்தாலும் அனைவரையும் ஒரே மாதிரி தான் கையாளுகிறது, அனைவருக்கும் ஒரே விதிதான்.
கொரோனா காலத்தில் உலகெங்கும் வசிக்கும் தமிழர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். தங்களின் தாயகம் திரும்ப நினைக்கும் அவர்களின் முயற்சிக்கு ஆதரவாக மத்திய அரசுமில்லை, மாநில அரசுமில்லை.
அரசுக்கு வேண்டுகோள்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு நாளும் எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. கர்ப்பி ணிகள், வயோதிகர்கள், இறப்பு வீட்டுக்கு வரவேண்டியவர் கள், விசா முடிந்தவர்கள், வேலையிழந்தவர்கள் என எல்லோ ரின் குரலும் விடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக இந்த விசயத்தில் அக்கறை மிகுந்த தலை யீட்டினை செய்ய, தனி சிறப்பு அதிகாரியை நியமித்து மத்திய அரசை நிர்ப்பந்தித்து, துடிப்போடு செயல்பட்டால் மட்டுமே துயரத்தில் வாழும் தமிழர்களுக்கு நியாயம் வழங்க முடியும்.
வந்தே பாரத் விமானங்களின் வழியாக வந்தாலும், தனித்த ஏற்பாட்டில் வந்தாலும் அனைவரையும் ஒன்று போல் நடத்தும் முடிவை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டு மெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.