tamilnadu

img

இது நந்தி கிராமம்...

சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பிரம்மாண்டமான பேரணியையும் பொதுக்கூட்டத்தையும் நந்திகிராமம் பார்த்தது. மேற்குவங்கத்தின் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நந்திகிராமத்தை மையப்படுத்தித்தான் வலதுசாரி மற்றும் இடது அதிதீவிர வெறிக்கும்பல்களின் துணையோடு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் அதன் தலைமையிலான இடதுமுன்னணியையும் குறி வைத்து மிக மிகக் கொடூரமான படுகொலைகளையும் வன்முறை வெறியாட்டங்களையும் அரங்கேற்றியது.

பல்லாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நந்திகிராமத்திலும், அதையொட்டி அமைந்துள்ள சந்திப்பூர் நகரிலும் செங்கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன. நந்திகிராமம் உள்ளிட்ட சந்திப்பூர் தாலுகாவின் 200க்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துக்கள் மற்றும் சந்திப்பூர் உள்ளிட்ட நகரங்களின் நூறு வார்டுகளைச் சேர்ந்த மக்களிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த சில மாதங்களாக இடைவிடாத அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு, மம்தா அரசின் அட்டூழியங்களையும் மோடி அரசுக்கு அது துணைபோவதையும் அம்பலப்படுத்தி மக்களை அணிதிரட்டியது. அதன் முத்தாய்ப்பாக நந்திகிராமத்திற்கு அருகில் சந்திப்பூர் நகர எல்லையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் தேப்லினா ஹேம்ராம், கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டச் செயலாளர் நிரஞ்சன் ஷிகி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.