tamilnadu

img

வரி ஏய்ப்பு புகார்: ஜேப்பியார் கல்விக் குழுமத்தில் சோதனை

சென்னை,நவ.7- ஜேப்பியர் கல்விக் குழுமம் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை  அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான ஜெ.பங்குராஜ் என்ற ஜேப்பியர், 1988 ஆம் ஆண்டு கல்வி அறக்கட்டளையைத் தொடங்கி னார். அந்த அறக்கட்டளையின் கீழ் 15 கல்வி நிறு வனங்கள் செயல்பட்டு வருகின்றன. சத்யபாமா அறி வியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஜேப்பி யர் மாமல்லன் பொறியியல் கல்லூரி, சத்யபாமா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, புனித மேரீ மேலாண்மை கல்வி நிறுவனம், பனி மலர் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி,  தொழில்நுட்பக் கல்லூரி, உள்ளிட்ட கல்வி நிறுவ னங்கள் ஜேப்பியர் கல்விக் குழுமத்திற்கு சொந்த மானவை ஆகும்.

இந்த நிலையில், வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக  அந்தக் கல்விக் குழுமம் தொடர்புடைய 30க்கும்  மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதி காரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்ற னர். பூந்தமல்லி, சூளைமேடு, ஓஎம்.ஆர்., சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி ஆகிய இடங்க ளில் உள்ள ஜேப்பியர் கல்வி நிறுவனங்களில் அதி காரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சுமார் 130 அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மாணவர்க ளிடம் வாங்கிய கட்டணம் தொடர்பான விவரங்கள் ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பு தக வல்கள் தெரிவிக்கின்றன. சூளைமேடு ரயில்வே காலனியில் உள்ள பனி மலர் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி யில் தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதை அடுத்து அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தி வரு கின்றனர். இன்னும் 2 அல்லது மூன்று நாட்கள் வரை சோதனை தொடரக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.