சென்னை, ஜூலை 12- கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கட்டாய இணையவழித் தேர்வை திரும்பப் பெறக்கோரி ஜூலை 17 அன்று இந்திய மாணவர் சங்கம் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள் ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வி.மாரி யப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
நாடுமுழுவதும் கொரோனா நோய்தொற் றின் தாக்கத்தால் மக்கள் பல்வேறு வகையில் முடங்கிக் கிடக்கிறார்கள். நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப் பட்டு வரும் சூழ்நிலையில் கல்வித்துறையில் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் தடுமாறி வருகின்றன. தற்போது மத்திய அரசு அனைத்து கல்லூரி மாணவர்களும் தங்கள் இறுதியாண்டு தேர்வி னை இணையவழியில் கட்டாயம் எழுதிட வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வினை நடத்துவதற்கான பொறுப்பினை அமேசான் கார்ப்பரேட் முதலாளி வசம் ஒப்படைத்துள்ளது. செப்டம்பர் இறுதிக் குள் நடத்த வேண்டும் என்ற காலவரையறையும் தெரிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக அரசும் நடத்துவது சாத்தியமற்றது என தெரி வித்துள்ளது. நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதை தவறவிட்டு இன்று மாணவர்கள் மீது நெருக்கடியை சுமத்த வுள்ளது. ஏற்கனவே தில்லியில் இணைய வழித்தேர்வு நடத்தப்பட்டு மிகப்பெரிய குளறு படிகளை சந்தித்த நிலையில் தேசம் முழுவதும் நடத்திட தடாலடியாக அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளது.
இணையவழித் தேர்வு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஏன் ஒவ்வொரு மாண வருக்குமே கிடைத்துள்ள வசதிகளிலிருந்து மாறுபடுகிறது. எனவே மாணவர்களுக்குள் இது மிகப்பெரிய ஏற்றத்தாழ்வினை ஏற்படுத்தும். அமேசான் கார்ப்பரேட் முதலாளியின் கொள்ளைக்கு துணை போவதை தவிர்த்து அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் முந்தைய பருவத்தேர்வின் அடிப்படையில் தேர்ச்சியினை வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் ஜூலை 17 ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத் திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.