சென்னை,ஜன.10- கன்னியாகுமரி மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறி விப்பில், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப் பட்ட காவல் உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தினருக்கு சட்டப்பேரவையில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்த முதலமைச்சர், அவருடைய குடும் பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப் படையிலான அரசுப் பணி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தாம் அறி வித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி, வில்சனின் உயரிய தியா கத்தை கருத்தில் கொண்டு, அவருடைய குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரண உதவியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.