சென்னை,மார்ச் 11- தமிழக சட்டப்பேரவையில் புதனன்று(மார்ச் 11) வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை கள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பினர் தா.மோ.அன்பர சன்,“பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று கடந்த 2019 ஆம் ஆண்டி லிருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப் பட்டது” என்றார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர், “பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க அரசு தயாராக உள்ளது. பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அப்போதுதான் முழுமையாக ஒழிக்க முடியும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அன்பரசன், “காட்டுப்பன்றி களால் ஏற்படும் பயிர் சேதம், நீலகிரியில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க மரங்கள் வெட்டப்படு வது குறித்தும் அரசின் கவனத்துக்கொண்டு வந்தார். இதற்கும் விளக்கம் அளித்த முதலமைச்சர், “வனப்பகுதியில் தான் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதம் செய்கிறது. இதனால் வனப்பகுதி விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவேதான், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதற்கு வனத்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் நிவாரணம் வழங்கப்படுகிறது என்றார். நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட கோரிக்கையை ஏற்றுதான் மருத்துவக் கல்லூரி துவங்கப்படுகிறது. மலைகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து கீழே வந்து தான் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. அதற்கா கத்தான் மலையிலேயே மருத்துவமனை அமைக் கப்படுகிறது. பல்வேறு இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் கிடைக்கவில்லை. ஒரு மரம் வெட்டப்பட்டால், பத்து மரங்கள் நடப்படும். இது முழுக்க முழுக்க மக்கள் நலன் கருதியே அமைக்கப்படுகிறது என்றும் முதல மைச்சர் தெரிவித்தார்.