சென்னை,பிப்.4- திருச்சி பாஜக நிர்வாகி கொலை தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அதிமுக கருத்து கிடையாது என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயபுரத்தில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார், “பாஜக நிர்வாகி கொலை தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இஸ்லாமியர்கள் பற்றி பேசியதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. அவர் பேசியது அதிமுக கருத்து கிடையாது. அது அவரது தனிப்பட்ட கருத்தாகும். அவரது கருத்தாக இல்லாத பட்சத்தில் ஆளுநரிடம் எப்படி முறையிடலாம்?” என்றார். டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.