tamilnadu

img

ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஏப்.17- சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளி யிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக காரணமாக அடுத்த 24 மணி  நேரத்தில் கோயம்புத்தூர், தேனி, ராமநாத புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னி யாகுமரி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்  காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நில வும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், மாலை நேரங்களில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்,  குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.