tamilnadu

img

பொன்னேரி மருத்துவமனையில் வாலிபர் சங்கம் ரத்ததானம்

திருவள்ளூர், ஏப். 25-  கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தன்னார்வ லர்களால் ரத்ததானம் செய்ய முடியவில்லை. நோயாளி களுக்கு ரத்த தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கம் வகையில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சனிக்கிழமையன்று (ஏப்.25) பொன்னேரி அரசு  மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர்.

வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.மதன்  தலைமை யில் நடைபெற்ற இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.  சங்கத்தின் மாவட்ட முன்னாள் துணை  செயலாளர் இ.சேகர்  40-வது முறையாக ரத்த தானம் செய்தார், கடந்த ஏப்-23 அன்று திருவள்ளூர் அரசு மருத்துவமனை யில் வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் எஸ்.தேவேந்தி ரன்  உட்பட 14 பேர் இரத்ததானம் செய்தனர்.