சென்னை, மார்ச் 21- கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26 கிலோ மீட்டர் நீளத்திலான வழித்தடத்திற்கான கட்டு மானப் பணிகள் மத்திய அரசு மற்றும் பன்னாட்டு நிதி நிறுவ னங்களின் ஒப்புதல் பெற்று மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார் தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், பூவிருந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க வேண்டியதன் அவசியம் குறித்து பூவிருந்தமல்லி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பி னர் கிருஷ்ணசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு பதிலளித்து பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட மாக வழித்தடம் ஒன்றில் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரை 23.1 கிலோ மீட்டர் நிளத்திலும், வழித்தடம் இரண்டில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்திலிருந்து புனித தோமையார் வரை 22 கிலோ மீட்டர் தூரத்திலும் பணிகள் முடிக்கப்பட்டு பயணிகள் சேவைக்காக இயக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதன் தொடர்ச்சியாக வண்ணாரப்பேட்டை முதல் திரு வொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் நீளத்தில் நீட்டிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார். இரண்டாம் கட்டத்தின் கீழ் 118.9 கி.மீ நீளத்திலான 3, 4 மற்றும் 5 ஆம் வழித்தடத்தங்கள் செயல்படுத்துவதற்கான ஒப்புதலை தமிழக அரசு கடந்தாண்டு வழங்கியிருப்பதாக தெரிவித்த அமைச்சர் சம்பத், கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் நீளத்திலான வழித் தடத்திற்கான கட்டுமானப் பணிகள் மத்திய அரசின் ஒப்புதல் நிதியுதவி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் ஒப்புதல் ஆகியவை பெறப்பட்ட பின் பணிகள் தொடங்கப்படும் எனவும் அமைச்ச எம்.சி.சம்பத் தெரிவித்தார்.