பசி போக்க மறுக்கும் மோடி அரசு
சென்னை, ஏப்.21- உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வீடுகள் முன்பு நடைபெற்ற இயக்கத்தில் அணிதிரண்ட தொழிலாளர்களுக்கு சிஐடியு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
மனித குலத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலி ருந்து மக்களை பாதுகாக்க மத்திய அரசு மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு பிறப்பித்தது. மக்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க உரிய நிவாரணத்தை அளிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஊரடங்கை மே 3 ஆம் தேதி வரை நீடித்துள்ளது. கடந்த 28 நாட்களாக மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். வேலை யில்லாமல் வருமானம் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட எந்தவித வாய்ப்புமில்லாமல் நிர்க்கதியாய் நிற்கும் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின் பசியாற அரசின் சேமிப்பு கிடங்குகளில் உள்ள உணவு தானியங்களை வழங்க மறுக்கிறது.
வருமானமின்றி தவிக்கும் உழைப்பாளி மக்களுக்கு எந்தவிதமான நிவாரணத்தையும் அறிவிக்க மறுக்கிறது. தொழில் நிறுவனங்களில் ஆட்குறைப்பு, சம்பள மறுப்பு, சம்பள குறைப்பு போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தடுக்க மறுக்கிறது. இவற்றுகெல்லாம் மேலாக பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தவும் முயற்சித்து வரு கிறது. இவையாவும் முதலாளிகளின் லாபத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறது.
இந்திய உழைப்பாளி மக்களில் பெரும் பகுதியாக உள்ள முறை சாரா தொழிலாளர்கள், உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரி யும் தொழிலாளர்கள், திட்ட தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறு வனங்களில் பணிபுரிந்து வரும் காண்ட்ராக்ட், கேசுவல் போன்ற பெயர்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஏப்ரல் 21 அன்று காலை நாடு முழுவதும் உள்ள சிஐடியு தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு குடும்பத்தினருடன் சிஐடியு கொடிகளுடன் கோரிக்கைகளை ஏந்தி அணிதிரண்டனர்.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தமிழகத்தின் அனைத்து மாவட் டங்களிலும் சிஐடியு மற்றும் மாதர், வாலிபர், மாணவர் சங்கங்களின் உறுப்பினர்கள், ஊழியர்கள் இவ்வியக்கத்தில் பங்கேற்றனர். தமிழ கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தாருடன் கோரிக்கை பதாகைகளு டன் அணிதிரண்டனர். சில இடங்களில் வீதிகளில் சமூக இடைவெளி யுடன் தொழிலாளர்கள் அணிவகுத்தனர்.
சிஐடியுவின் அறைகூவலை ஏற்று இந்த இயக்கத்தில் பங்கெடுத்த தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வாழ்த்துக்களையும். பாராட்டுக்களை யும் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.