tamilnadu

img

அரசு ஊழியர்கள் மாபெரும் பேரணி

இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும்  அரசாணை 56ஐ ரத்து செய்திடுக!

சென்னை, நவ. 18- இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்  அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும், அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திங்களன்று (நவ.18) மாபெரும் பேரணி நடைபெற்றது. ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை கைவிட வேண்டும்; தமிழக அரசுத் துறைகளிலுள்ள 4.5 லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்; சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நவம்பர் 11 முதல் 15 வரை லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களை சந்தித்து பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

பிரச்சாரம் நிறைவு 

ஓசூர், நீலகிரி மாவட்டம் கூடலூர், இராமேஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம் களி யக்காவிளை, வேதாரண்யம் ஆகிய 5 முனை களிலிருந்து புறப்பட்ட பிரச்சார இயக்கத்தின் நிறைவாக திங்களன்று (நவ. 18) வாலாஜா சாலை யிலிருந்து துவங்கிய பேரணியை இந்திய மாண வர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரி யப்பன் துவக்கி வைத்தார். பிரச்சார இயக்கத் தின் நிறைவுக் கூட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு தலைமையில் நடைபெற்றது.  

அரசுத்துறைகள் தனியார்வசமா?

மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தின் நோக்கம் குறித்து பொதுச் செயலாளர் ஆ.செல்வம் பேசுகையில், தமிழகத்தில் அரசுத் துறைகளில் நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப் படாமல் உள்ளன. பட்டப் படிப்பு, உயர் படிப்பு படித்து விட்டு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்பின்றி தவித்துக் கொண்டுள்ளனர். அரசு பிறப்பித்துள்ள அரசாணை 56 என்பது  முற்றிலுமாக அரசுத் துறைகளை தனியார்வசம் அடகு வைக்கும் முயற்சியாகும். எனவே இளை ஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கக்கூடிய அரசானை 56ஐ ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள மனிதவள மேலாண்மை என்பது அரசுப் பணி யிடங்களை காலியாக்கி முற்றிலுமாக ஒழித்து விட்டு அவற்றை தனியார்வசம் ஒப்படைத்து விட அரசு முயற்சிக்கிறது. எனவே தமிழக அரசின் புள்ளிவிவரங்களை முற்றிலுமாக தனியார்வசம் ஒப்படைக்கும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தினை அரசு கைவிட வேண்டும் என்றார்.

இதுகுறித்து அமைச்சர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. எனவே தமிழக முதல்வர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனை களுக்கு சுமூக தீர்வுகாண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பிரச்சாரத்தை நிறைவு செய்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உரையாற்றினார். முன்னதாக மாநிலச் செய லாளர் சி.பரமேஸ்வரி வரவேற்றார். மாநிலப் பொருளாளர் மு.பாஸ்கரன் நன்றி கூறினார். இதில் மாநிலத் துணைத் தலைவர்கள் மொ. ஞானத்தம்பி, ஏ.பெரியசாமி, இரா.மங்கள பாண்டியன், என்.வெங்கடேசன், மு.சீனிவாசன், கோ.பழனியம்மாள், மாநில செயலாளர்கள் சி.ஆர்.ராஜ்குமார், ந.நம்பிராஜன், சி.எஸ்.கிறிஸ் டோபர், உ.சண்முகம், தெ.வாசுகி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.