tamilnadu

img

வாக்காளர் பட்டியலில் வாக்காளரே திருத்தம் செய்யும் வசதி அறிமுகம்

சென்னை,செப்.1- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணிகள் தொடங்கி, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் என அனைத்து திருத்தங்களையும் செய்துகொள்ளலாம். இந்நிலையில், தேர்தல் ஆணை யத்தின் செயலி மூலம் வாக்காளர் பட்டிய லில் உள்ள விவரங்களை வாக்காளர்களே திருத்தம் செய்துகொள்ளும் திட்டம் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை அடையாறு மண்டல அலுவலகத்தில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  மொபைல் அல்லது கம்ப் யூட்டரில் Voter help line என்ற செய லியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் திருத்தங்களை வாக்காளர்களே செய்து கொள்ளலாம். செயலியை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு உதவும் வகையில் வார்டு அலுவலகங்களிலும், இ-சேவை மையங்களிலும் உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ஆன்லைன் மூலம் மட்டுமில்லாமல் படிவம் மூலமும் விவரங்களை மாற்றி யமைத்து கொள்ளலாம். திருத்தப்பட வேண்டிய விவரங்களை வாக்காளர்கள் செயலியில் பதிவேற்றம் செய்த 15 நாட்க ளில் அந்த விவரங்கள் மாற்றப்படும். இந்த செயலியை தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப பிரிவினர் மக்களுக்கு எளி தாக பயன்படும் வகையில் உருவாக்கி யுள்ளனர்.