tamilnadu

img

மூத்த குடிமக்களுக்கு அதிகரிக்கும் மாதாந்திர பிரீமியம்

அதிக பணப்புழக்கம், முதலீட்டின் எளிமை, உறுதியான வருவாய் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு மூத்த குடிமக்களுக்கு அதிகரிக்கும் மாதாந்திர  பிரீமியம் வழங்குவதாக வங்கிகள் தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு வழக்கமாக 0.5% அதிக பிரீமியம் போன்ற பிற நன்மைகள் மூத்த குடிமக்களின்  எஃப்.டி -யின் அடிப்படையில் வங்கிகள் கொடுத்து வந்தது. கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் வங்கிகள் அத்தகைய குடிமக்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சிறப்பு எஃப்.டி திட்டங்களை வங்கிகள் கொண்டு வந்துள்ளது.

 அதாவது செப்டம்பர் 30, 2020 வரை 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் அதிகமான ஆண்டுகளில்  எஃப்.டி.-இல் பணம் டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்களுக்கு  சிறந்த வருவாய் வழங்கப்படும் என வங்கிகள் அறிவித்துள்ளது. மேலும்,  அத்தகைய  எஃப்.டி சிறந்த வருவாயானது  அவர்களுடைய   மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது வருடாந்திர ஊதியம் ஆகியவற்றைப் பொறுத்தது.

இதனால் மூத்த குடிமக்களுக்கு  எதிர்காலத்தில் எந்தவொரு வட்டி வீத உயர்விலிருந்தும் வெகுமதி அளிக்கப்படும். மேலும், ஏதேனும் அவசரம் நிலையில், அவர்களுடைய  எஃப்.டி.யை முன்கூட்டியே உடைக்க அல்லது ( cancel)  செய்ய முடியும்.அதற்கான தொகையானது ,அந்த குறிப்பிட்ட ஆண்டிற்கான சிறந்த வட்டியுடன் அவர்களின் பணம் கொடுக்கப்படும் என வங்கிகள் அறிவித்துள்ளது