tamilnadu

img

சென்னையில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம்

சென்னை, நவ. 29-  தமிழகம், புதுச்சேரியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாட்க ளுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெள்ளியன்று (நவ.29) செய்தியாளர்களை சந்தித்த போது  கூறியதாவது: தமிழக கடற்கரையையொட்டி இருக்  கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கார ணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மித மானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு  உள்ளது.

மேலும், கடலூர், நாகை, தஞ்சாவூர், திரு வாரூர், அரியலூர், சிவகங்கை, ராமநாத புரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்  டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை யும், ஓரிரு இடங்களில் மிகக் கனமழை யும் பெய்யும். டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் தமி ழக கடலோர மாவட்டங்களில் பெரும்பா லான இடங்களில் மிதமான மழையும், ஒரு  சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்க ளில் மிகக் கனமழையும் பதிவாகும். மீனவர்களைப் பொறுத்தவரை, சூறா வளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் அடுத்த 2 நாட்களுக்கு வங்கக் கட லுக்குச் செல்ல வேண்டாம் என்று அறி வுறுத்தப்படுகிறது. சென்னையில்  சனிக் கிழமை கனமழை பெய்யும். இவ்வாறு புவியரசன் கூறினார்.