tamilnadu

img

“ஏழைகளுக்கு உணவளிப்போம்” திட்டம்: மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தார்

சென்னை, ஏப்.30- தமிழ்நாடு முழுவதும் 25 நகரங்களில் பசியிலிருக்கும் 20 லட்சம் பேருக்கு உணவளிக்க “ஏழை எளியோருக்கு உண வளிப்போம்” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளதாக, திமுக தலை வர் ஸ்டாலின் தெரிவித்துள் ளார்.

கொரோனா வைரஸ் பரவ லைத் தடுக்க நாடு முழுவதும் ஊர டங்கு உத்தரவு அமலில் உள்ள தால் ஏழை, எளிய மக்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்க ளுக்கு அத்தியாவசியப் பொருட் கள் வழங்கி, உதவும் வண்ணம் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் கீழ், தொலைபேசி எண்கள் அறிமுகம் செய்து திமுக நிர்வாகிகள் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பாக ஏழைகளுக்கு உணவளிக்கும் விதமாக “ஏழைகளுக்கு உண வளிப்போம்” என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து திமுக தலைவர்  ஸ்டாலின் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உண வுக்கே வழியில்லாத மக்கள், வாழ்விடம் இல்லாத மக்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், தினசரி வருமானம் ஈட்டுபவர் கள், வீடற்றவர்கள் என லட்சக்  கணக்கான மக்கள் இருக்கிறார் கள். அத்தகையோர் அதிக துய ரத்தில் இருக்கிறார்கள். பொருள்  கொடுத்தால் சமைத்துக் கொள்வோம் என்று கேட்கும் மக்கள் ஒரு பக்கம். பொருள் கொடுத்தாலும் சமைக்க இட மில்லை என்று சொல்லும் மக்கள்  இன்னொரு பக்கம். அதனால், பசியோடு உள்ள குழந்தைக்கும், குடும்பத்திற்கும் உணவைத் தரமுடியாத நிலையில் இருக்கி றார்கள். “தனியொரு மனிதனுக்கு  உணவில்லை எனில், ஜகத்தினை  அழித்திடு வோம்” என்று மகாகவி பாடியிருப்பார். தனியொரு மனி தனும் பசியால் இருக்கக் கூடாது  என்பதற்காகத்தான் ‘ஏழை களுக்கு உணவளிப்போம்’ என்ற திட்டத்தைத் தொடங்கியிருக் கிறோம்.

இதன் மூலம், நாளொன்றுக்கு லட்சம் பேருக்கு உணவு அளிக்கிறோம். பட்டினி இல்லா சூழ்நிலையை ஓரளவுக்கு உரு வாக்கு வோம். இதற்காக 25  முக்கிய நகரங்களில் சமையற்  கூடங்களை உருவாக்கி, உணவு கள் வழங்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.