சென்னை, ஏப்.8- கொரோனா நிவாரண பணிகளுக்காக இதுவரை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.79.74 கோடி வந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் மக்களிடமிருந்து 2 ஆம் தேதி வரை மொத்தம் 62 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 538 ரூபாய் வரப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையிலான 4 நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியுள்ளனர்.
இந்த 4 நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து 17 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரத்து 886 ரூபாய் வரப்பெற்றுள்ளது. அந்தவகையில் இதுவரை பெறப்பட்ட மொத்தத் தொகை 79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் ஆகும். இந்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் முதலமைச்சர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.