tamilnadu

img

கேப்டன், மாலை முரசு டிவிகளில் தொழிலாளர் விரோதப்போக்கு!

சென்னை ஏப்.8- வல்லரசுகள் என இது நாள்வரை உலகை ஆதிக்கம் செலுத்தி வந்த நாடுகள் தொடங்கி, வல்லரசாகத் துடிக்கும் இந்தியா போன்ற வள ரும் நாடுகள் வரை கொரோனா வின் முன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. இந்நாடு கள் அனைத்தும் முழுமையான ஊரடங்கை நடைமுறைப் படுத்தியதோடு அனைத்துத் துறை தொழிலாளர்களுக் கும் ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பு வழங்கி கொரோனா பரவலைத் தடுக்க முயற்சித்து வருகின்றன.

ஆனால் மருத்துவம், ஊட கம், காவல்துறை பணியாளர்க ளுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இம்மாதிரியான இக்கட்டான சூழலில் மேற்கூறிய  பணியாளர்க ளின் தேவை இன்றி யமையாத ஒன்று. அப்படி, தம் உயிரையும் பொருட்படுத்தா மல் ஊடகத்துறையைச் சேர்ந்த செய்தியாளர்கள், துணை ஆசிரியர்கள், ஒளிப்பதி வாளர்கள், ஓட்டுநர்கள் எனப் பல்லாயி ரம் பேர் இந்நேரத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்  களின் உயிர்காக்க பல ஊடக நிறுவனங்கள் பாதுகாப்பு உப கரணங்களை அவர்களுக்கு வழங்கி வருவதோடு, உணவு,  போக்குவரத்து வசதி உள்ளிட்ட வையையும் செய்து கொடுத் துள்ளன.

மேலும், சில நிறுவனங்கள் தாமாக முன்வந்து நோய் தொற்றிலிருந்து தம் பணியாளர்  களை பாதுகாக்கும் வகையில்  அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பும் வழங்கியுள் ளன. ஆனால், எந்த நேரமும், யாருக்கும் கொரோனா பரவக்  கூடும் என்ற இந்த கொடிய சூழ லிலும், தம் உயிர் பாதுகாப்புக் கருதி பணிக்கு சில நாட்கள் வராத ஊழியர்களிடம் கேப்டன் தொலைக்காட்சி சம்பளப் பிடித்தம் செய்துள்ளது. அற மற்ற இச்செயலைக் கண்டித்து  மாற்றத்திற்கான ஊடகவிய லாளர்கள் மையம் அறிக்கை  வெளியிட்டதோடு, சம்பந்தப் பட்ட அந்நிறுவனம் உடனடி யாக பிடித்தம் செய்த ஊதி யத்தொகையை தம் பணியா ளர்களுக்கு வழங்க வேண்டு மெனவும் வலியுறுத்தியிருந்தது. இதனிடையே, செய்தியாளர் களை சந்தித்த தமிழக உள் ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ‘மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மீறி எந்த ஒரு தனியார் நிறுவன மும், வேலைக்கு வருமாறு பணியாளர்களை நிர்பந்திக் கவோ, வேலைக்கு வராத நாட்க ளுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்யவோ கண்டிப்பாக கூடாது’ எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில்தான், அரசு  அறிவித்த ஊரடங்கு நாட்க ளில் பணிக்கு வராத தம் பணி யாளர்கள் சுமார் இருபதுக்கும் மேற்பட்டோரிடமிருந்து சரா சரியாக 4,000 ரூபாய் வரை  சம்பளப் பிடித்தம் செய்திருக்கி றது மாலை முரசு தொலைக் காட்சி. ஏற்கனவே கேப்டன் தொலைக்காட்சி செய்த சம்ப ளப் பிடித்தத்தை சுட்டிக்காட்டிய பின்பும், தமிழக அமைச்சரே இது கண்டிக்கத்தக்க செயல் எனக் கூறிய பின்னரும் கூட மாலை முரசு தொலைக்காட்சி யின் இந்த மனிதாபி மான மற்ற, அராஜக செயலை மாற்றத்  திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாகக் கண்டித்  துள்ளது.

உலகே பயந்து கிடக்கும் சூழ லில் பணி செய்யும் ஊடகத்  தொழிலாளர்களுக்கு துரோக மிழைக்கும் கேப்டன் மற்றும்  மாலை முரசு தொலைக்காட்சி கள் தம் தவறை உணர்ந்து கால தாமதமின்றி உடனடியாக தம் பணியாளர்களிடம் பிடித்தம்  செய்த பணத்தை திருப்பி யளிக்க வேண்டுமென தமிழ்நாடு  பத்திரிகையாளர் சங்கம் (டியுஜே) வலியுறுத்தி உள்ளது. மேலும், அடுத்த இரண்டு மாதங்கள் கொரோனாவின் பரவல் அதிகமாகும் என்ற  அச்சம் எழுவதால், பணியாளர்  களை மேலும் அச்சுறுத்தாமல் அவர்களுக்குத் தேவையான வற்றை செய்து கொடுக்கும் படியும்  இம்மாதிரியான நிகழ்வு கள், இனி வேறு எந்த பத்திரிகை  மற்றும் காட்சி ஊடக நிறுவனங்க ளிலும் நிகழாமல் இருக்க பத்திரிகையாளர் பாதுகாப்பை வலியுறுத்தி அனைத்து பத்தி ரிகை சங்கங்களும் குரல் கொடுக்  கவும், ஒன்றிணையவும் மாற்  றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொண்டுள் ளது.