லக்னோ, நவ.9- பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தனது கட்சியினருடன், கடந்த 1995-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி லக்னோ வில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஆலோச னைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது சமாஜ்வாதி கட்சியினர் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதுதொடர் பாக மாயாவதி புகாரின் பேரில் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட சமாஜ்வாதி தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டிருந்தது. இந் நிலையில், 24 ஆண்டுகளு க்குப் பின் இந்த வழக்கை மாயாவதி திரும்பப் பெற்றுள்ளார்.