உதகை – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் நீலகிரி மலை ரயிலின் கட்டண உயர்வு இன்று (பிப்.21) முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இயக்க செலவினங்கள் அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த கட்டண மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய கட்டண விவரம்:
உதகை – மேட்டுப்பாளையம் சாதாரண முதல் வகுப்பு கட்டணம்: ரூ.520 இலிருந்து ரூ.550 ஆக உயர்வு
முன்பதிவு செய்யப்பட்ட முதல் வகுப்பு கட்டணம்: ரூ.600 இலிருந்து ரூ.630 ஆக உயர்வு
அதே நேரத்தில், ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தெற்கு ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.
சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்தும் இந்த மலை ரயில் சேவையில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதால், பயணிகள் முன்கூட்டியே தகவல் அறிந்து பயணத் திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
