உதகை, மார்ச் 7- மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களின் விளைவாக உதகையில் பழங்குடியின மக்க ளுக்கு தொகுப்பு வீடுகள் கட்ட உடன்பாடு காணப்பட்டது. நீலகிரி மாவட்டம், சேரம்பாடி அருகில் பழங்குடியினர் காலனி உள்ளது. இங்கு 7 குடும்பத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலை யில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காட்டு யானை கூட்டம் இவர்களது குடியிருப்புகளை சேதப்படுத்தியது. இதனால் இவர்கள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இரவு நேரத்தில் மட்டும் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடு இல்லாமல் அரசுப் பள்ளியி லேயே தங்கி வந்தனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் இவர்களுக்கு வீடு அமைத்து தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட நிர்வா கம் முதல் கட்டமாக 3 தொகுப்பு வீடுகள் கட்ட நடவடிக்கை எடுத் தது. அதனைத்தொடர்ந்து, கட்டு மான பணிகள் நடைபெற்று வந் தது. இந்நிலையில், தனியார் தேயிலை தோட்ட நிர்வாகம் தொகுப்பு வீடுகளை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தியது. தடையில்லா சான்று பெறாமலும் ,வீடு கட்ட இடத்தை தேர்வு செய்யாமலும் வேலை செய்ததால் தடுப்பதாக தோட்ட நிர்வாகம் கூறியது. இதனைக் கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை அன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் முன் னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்களு டன் வெள்ளியன்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் முதல் கட்டமாக நில அளவை செய்து இடத்தை உறுதி செய்தனர். மேலும் தடையில்லா சான்று வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன்பின்னர் பணி மீண்டும் துவங்கியது. இதனை கண்ட பழங் குடி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். முன்னதாக, இந்த பேச்சுவார்த் தையின் போது பந்தலூர் வட்டாட் சியர், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர், சேரம்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் உள் ளிட்ட அரசு அதிகாரிகளும், ஊராட்சி மன்ற தலைவர் லில்லி ஏலியாஸ், ஊராட்சி துணைத் தலைவர் சந்திரபோஸ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் சி.மணிகண்டன், இடை கமிட்டி உறுப்பினர் பாபு, கிளைச் செயலா ளர் பாவா, மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.