குன்னூர், மே 28- குன்னூர் அருகே கொரோனா நிவாரண உதவி வழங்க வந்த அதிமுக எம்எல்ஏவுக்கு அக்கட்சியினரே கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் கன்டோன்மெண்ட் வாரியத்துக்கு உட்பட்ட பாபு வில்லேஜ் பகுதியில் மே 28 வியாழனன்று சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு நிவாரணப் பொருட்கள் வழங்க வந்தார். அப்போது, அதிமுகவை சேர்ந்த வெலிங்டன் கன்டோன் மெண்ட் வாரிய துணைத்தலைவர் எம்.பாரதியார் மற்றும் உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினரின் காரை வழி மறித்து, கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு தனது ஆதரவாளர்களுடன் நடந்து சென்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதுகுறித்து குன்னூர் எம்எல்ஏ சாந்திராமு கூறும் போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுகவை சேர்ந்த வர்களே தேவையில்லாமல் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். இது குறித்து தமிழக முதல்வர் துணை முதல்வர் மற்றும் எங்கள் மண்டல அமைச்சர்களிடம் புகார் தெரி வித்து, கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என் றார்.