tamilnadu

குன்னூரில் தேயிலைத்தூள் ஏலம்

உதகை, மே 19-குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ரூ.10 கோடியே 83 லட்சத்திற்கு தேயிலைத்தூள் விற்பனையாகியுள்ளதாக தேயிலை வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கியத் தொழிலாகும். ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் இத்தொழிலை நம்பி உள்ளனர். மாவட்டத்தில் 16 கூட்டுறவு தேயிலைதொழிற்சாலைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் தேயிலைத்தூள் குன்னூர் ஏல மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் மூலம் தேயிலை வர்த்தக கூட்டமைப்பு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படும் ஏலத்தில் வர்த்தகர் அமைப்பில் உறுப்பினராக உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். இவ்வாறு இலை, டஸ்ட், தூள் ரகம் என மூன்று வகையில் 12 லட்சத்து ஆயிரம்கிலோ விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இதில்92 சதவிகிதம் விற்பனை செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 கோடியே 83 லட்சம் ஆகும்.