உதகை, ஜூலை 2- உதகை காந்தள் பகுதியில் நடைபாதையில் கழிவு நீர் வலிந்து ஓடுவதால் பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டிற்கு உள்ளாகி உள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள காந்தள் 23 ஆவது வார்டில் மேல் தங்களாம் தெரு உள்ளது. இங்குள்ள பொது கழிப்பறை ஒன்று பல மாதங்களாக போதிய பரா மரிப்பு இன்றி காணப்படுகிறது. மேலும் அங்குள்ள கழிவு நீர் தேக்கத் தொட்டியில் இருந்து கழிவுநீர் நிரம்பி கடந்த ஒரு வாரமாக நடைப்பாதையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பல தொற்று வியாதிகள் பரவும் அபா யமும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தபட்ட அதி காரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் தற்போது வரை யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே அதிகாரிகள் போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.